Monday, January 26, 2009

புகழ்ச்சி

"பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் மயங்காதவர்கள் கூட புகழுக்கு மயங்குவதுண்டு. புகழ்ச்சியும் பாராட்டுமே ஒருவன் தன் செயல்களில் மேலும் வெற்றி பெறுவதற்கான ஊக்குவிப்பாக அமையக்கூடும். ஆனால் மிகுந்த புகழ்ச்சி ஒருவனின் கர்வத்தை அதிகப்படுத்தி அவனது வீழ்ச்சிக்கே காரணமாகவும் அமையக்கூடும்.

இந்த சூட்சுமம் தெரிந்த சிலர் தங்கள் காரியத்தை மற்றவர்களை புகழ்ந்தே சாதித்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மிகுந்த புகழ்ச்சிக்கு மயங்காது நிலையாக இருக்கிறார்கள்.

அதுபோன் புகழ்ச்சிக்கு நானும் ஒருமுறை ஆளான போதுதான் இந்தக் கவிதையை எழுதினேன்".

கொண்டநற் றிறனைக் காட்டிய பின்னே
கண்டவர் அனைவரும் புகழ்கிறார் இங்கே
வேண்டாம் இந்தப் பெரும்புகழ் என்னை
வீணென் றாக்கும் ஆணவம் பற்றும்
சான்றோர் தம்மைக் கண்டால் என்னுள்
தோன்றும் அடக்கம் தொலைந்தே போகும்
சிறிதாய் இங்கோர் வீழ்ச்சிவந் தாலும்
பெரிதாய்த் தோன்றும் காண்பவர்க் கிங்கே
இகத்தை ஆளுந் திறமிருந் தாலும்
புகழ்வ திங்கே யிருக்கட்டும் அளவாய்

-இராஜகுரு

2 comments:

Unknown said...

"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு " - இது புகழுக்கும் பொருந்தும் என்ற கருத்தை கவிதை நடையில் படைத்தது அற்புதம்

அண்ணாமலை..!! said...

நல்லா சொன்னீங்க போங்க..!!!
அருமையான தமிழ்நடை..!!