அந்தியிலே பூத்தமலர் அப்பொழுதே கொய்ததெண்ணி
நொந்து நொந்து நெஞ்சமெலாம் நோக - வண்ணப்
பூச்சரமாய் மாறியதில் பயனுண்டா என்றுசொல்லிக்
கூச்சலிட முடியாமல் பூக்கடையில் வாட
அந்த வேளையிலே வந்து நின்ற
நங்கையவள் பட்டுவிரல் பட்டவுடன் மொட்டுமலர்
தங்கமென ஜொலித்ததென்ன சொல்ல; அடடா
கன்னியவள் பூச்சூடும் அழகதனைக் கண்டால்தான்
அந்தநாள் இனியநாள் கும்; அன்னவள்
மொய்குழலில் சூடுகின்ற மலர்கொண்ட வாசத்தில்
மெய்மறந் திருந்தால்தான் வாழ்வில்சுகம் சேரும்.
- இராஜகுரு
Sunday, August 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
/நான் தற்போது உலகத் தமிழ் மரபுக் கவிஞர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
அதற்காக orkut இணையதளத்தில் "தமிழ் மரபுக் கவிதைகள்" என்ற பெயரில் ஒரு குழுமத்தை(orkut community) உருவாக்கியுள்ளேன்.
குழுமத்திற்கு மரபுக் கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து வண்ணம் உள்ளனர்.
இக்குழுமத்தில் இணைவதால் பல மரபுக் கவிஞர்களின் கவிதைகளை ஒரே இடத்தில் காணவும், அவர்களின் கவிதைகள் குறித்து கருத்தாடவும் கூடும்.
நாம் இவ்வாறு இணைவதன் மூலம் மரபுக் கவிஞர்களை மேலும் ஊக்குவிக்கவும், இன்னும் பல மரபுக் கவிஞர்கள் தோன்றவும் கூடும்
தாங்களும் மரபுக் கவிதைகள் எழுதக் கூடியவர் என்பதால் தங்களையும் "தமிழ் மரபுக் கவிதைகள்" குழுமத்தில் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்./
இப்பொழது தான் தமிழ் கற்றுக் கொண்டு உள்ளேன்.
கூடிய விரைவில் குழுமத்தில் இணைக்கின்றேன்.
தங்களின்
அன்புக்கு நன்றி
என்றும் அன்புடன்
திகழ்மிளிர்
பூவை பூச்சூடிய அழகினை
பாவில் பூந்தமிழில் படைத்ததும் அழகே!
வாழ்த்துகள்!ராஜகுரு!
அன்புடன்,
தங்கமணி.
அம்மா, மறுமொழி இட்டமைக்கு நன்றி.
திகழ்மிளிர் அவர்களுக்கு,
என் அழைப்பை ஏற்று பதில் அளித்தமைக்கு நன்றி.
குழுமத்தில் தங்கள் வரவிற்காக காத்திருக்கிறேன்.
மற்ற வேலைகளின் காரணமாக தக்க நேரத்தில் பதில் அளிக்க முடியாமல் போய்விட்டது.
அன்புடன்,
இராஜகுரு
பூவையினழகுடன் பூவினழகை....
என்ன சொல்ல..?? அழகுத் தமிழ்நடை..!!
Post a Comment