Tuesday, July 7, 2009

கண்ணீர் கலந்த கவிதை

இதன் முந்தைய கவிதையைப் படித்த பிறகே இந்தக் கவிதையைப் படிக்கவும்.

அன்று சுனாமி வந்த பொழுது கடலுக்கு ஆதரவாகப் பேசியவன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பாடாமல் இல்லை. உண்மையில் இதுதான் முதலில் எழுதிய கவிதை. அதன் பிறகு தான் கடலுக்காக எழுதினேன்.

கரைமீது விளையாடி கடலோடு
        கவிபாடி களித்திருந்தோம் இன்றந்தக்
கரைதன்னை மறைத்தெங்கும் நீர்நிறைந்து
        நீர்மறைத்து மிதப்பதெங்கும் பிணங்களாக
நிறைகின்ற நீரொடுகண் ணீர்நிறைந்தே
        அழுகுரலின் ஒலியுமிங்கு நிறைகிறது
குறையின்றிப் பிழைத்துவிட்டோம் என்றெண்ணி
        ஒருகூட்டம் நிம்மதியில் சிரிக்கிறது

சிறுக சிறுக சேர்த்து வைத்த
        செல்வ மெல்லாம்
பெருகி வந்த வெள்ளத் தோடு
        போன தாலே
இருந்த இடத்தை விட்டுப் போகவும்
        வழியவர்க் கில்லை
இருக்கும் இடத்தில் வாழ இனியவர்க்
        குணவும் இல்லை

பெற்ற பிள்ளை கடலில் சாகும்
        கொடுமை தன்னைக் கண்டார்
சுற்றம் என்று சொல்லிக் கொள்ள
        இனியவர்க் கெவரும் உண்டோ?
நிற்கவும் இடமிலை பிணத்தின் நாற்றம்
        எங்கும் வீச; அதிலும்
பெற்ற தாயின் உடலைத் தேடும்
        மரண வேதனை கொண்டார்

நினைத்தாலும் உள்ளம் கொதிக்கிறது - கடல்
நீரெங்கும் பிணங்கள் மிதக்கிறது
பிணக்காடாய் ஊரே ஆனது - உடலை
வாங்கவும் ஆளின்றிப் போனது

எவரும் எதிர்பாரா தருணம் - நில
நடுக்கத்தால் எத்தனை மரணம் - மகிழ்ச்சி
மீண்டும் என்று மலரும்? - அந்த
நாளும் விரைவில் வரணும்


-இராஜகுரு
(02 / ஜனவரி / 2005)

(குறிப்பு: "தருணம்" என்பது தமிழ்ச் சொல் அல்ல. 'அதை மாற்றினால் அங்கு அமைந்த ஓசை மாறக்கூடும். அதனால் அதை மாற்ற வேண்டாம்' என்ற நண்பர் ஒருவரின் கருத்துக்காக அதை மாற்றவில்லை)

10 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

அகரம்.அமுதா said...

அருமை. வாழ்க

உமா said...

இன்றும் என்றும் மனம் வலிக்கும் மணித்துளிகள் அவை. திருவல்லிக்கேணியில் மிக அருகில் பத்து அதினைந்து சிறு குழந்தைகளை எடுத்துக் கொண்டு சிலர் ஓடியதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தோம். நேரம் ஆக ஆக அதன் தீவிரம் உணர்ந்து தவித்தோம்.இன்னும் அப்படியே நிற்கிறது அக் குந்தைகளின் முகம்.
நினைவூட்டியது உங்கள் கவிதை.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

cheena (சீனா) said...

அன்பின் ராஜகுரு

சுனாமி - கவிதை அருமை - சொல்லொண்ணாத் துயரம் = என்ன செய்வது ....

கவிதை நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

Dear Rajaguru

Please avoid word verification as bloggers will get irritated easily

Regards
Cheena

Raajaguru said...

Dear Cheena,

So glad to see your comment.

Word verification is not set by me. It is done by Google.

உருத்திரா said...

மறக்க முடியாத நினைவுகள், -யாரும்
துறக்க முயலும் சோகங்கள்.
வரிகளாய் வரித்த உங்களுக்கு,-என்
வாழ்த்தரிய வாழ்த்துக்கள் என்றும்.